சீமான் தான் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்... 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வைரலாகும் பதிவு!
8 வருஷத்துக்கு முன்னாடியே சீமான் இப்படி தான்…. முன் கூட்டியே கணித்த நபர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!
தமிழகத்தில் நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து பெரும் கேலிப் பொருளாகியுள்ளார்.
இதற்கு பெரியாரைப் பற்றிய சீமான் விமர்சித்தது தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்த கட்சியினரோ கடந்த இடைத்தேர்தலை விட தற்போது நாம் தமிழர் கட்சியினர் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம் எனக் கூறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகும் பணியும் நடைபெற்று வருகிறது. சீமான் கட்சியில் தன்னை விட வேறு யாரும் வளரக்கூடாது என நினைப்பதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாகவே சீமான் பெரியாரை விமர்சிப்பார் எனவும் கட்சியில் தன்னைவிட பிறரை வளர விட மாட்டார் எனவும் ஒருவர் கணித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் “ சீமானிடம் ஒரு தெளிவு இருக்கிறது. அவர் தனக்கு பயன்படும் தான் கையாளும் அளவில் தன் கட்சி இருந்தால் போதும். அதிகம் ஒரு மில்லி மீட்டர் கூட வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுவார். கொஞ்சம் குறைந்தால் ஈழம் பேசுவார். கொஞ்சம் வளர்ந்தால் பெரியாரை முட்டுவார். முரணாக பேசி தங்கள் வளர்ச்சியை அவரே மட்டப்படுத்திக் கொள்வார். அவருக்கு கொடுக்கப்பட்ட எல்லை அவ்வளவுதான். இது திட்டமிட்ட சிறிய கட்சி. தெவிட்டாத இன்பம் நிலையான வருவாய் என பதிவிட்டுள்ளார். சீமான் தன்னுடைய கட்சியை வளர விட மாட்டார் எனவும் அப்படி வளர்ந்தால் அவரே மட்டம் தட்டி வளர விட மாட்டார் எனவும் கூறியுள்ள நிலையில் தற்போது கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளும் இதே குற்றச்சாட்டுகளை தான் முன்வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!