காவிரி நீர் தர மறுக்கும் காங்கிரஸ்... விஜய்யுடன் கூட்டணி ஏன்? சீமான் சராமாரி கேள்வி!
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்திருப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து தவெக கூட்டணியை விமர்சித்தார்.
காவிரி நீரை வழங்க மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காக எப்படிப் பேச முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருக்கும் நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது முரண்பாடானது என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து, தமிழக துணை சபாநாயகர் தொடர்பான விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய சீமான், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சீமானின் இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.