அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் - முதல்வருக்கு சீமான் வலியுறுத்தல்!

 

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என அடம் பிடிக்கும் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் போது, பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாடு அரசு ஏன் கூட்ட மறுக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலே, அது மத்திய அரசுக்கும் கர்நாடக அரசிற்கும் மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுக்கும் எனச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலத்தின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முன்வர வேண்டும் என அவர் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.