ஆரஞ்சோ, ஆப்பிளோ.. செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்... அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 கன அடியில் உபரி நீர் திறப்பு தொடங்கி பின்னர் அதிக தண்ணீர் வரத்து காரணமாக 6,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
பின்னர் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக தற்போது 3 ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து நீர் வருகிறது. உபரி நீர் திறந்து விடப்பட்டால் எந்தெந்த பகுதி வழியாக அடையார் ஆற்றில் கலக்கிறது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கி காண்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை இல்லை என்று யார் சொன்னது. ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை. குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.
நீர்வளத் துறைக்கு மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. ஒரு பக்கம் தூர் வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர் வார நிதி ஆதாரம் கொடுக்கவில்லை, கேட்டு கொண்டிருக்கிறோம். அனைத்தையும் தூர்வாருவது ஒரே நேரத்தில் முடியாத காரியம்.
பொதுவாகவே நமது சமுதாயத்தில் பெரிய பிரச்சனை உள்ளது. எதுவாக இருந்தாலும் ஏரி, கால்வாயில் கொட்டி விடுகிறார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதிகளில் பாலாறு அடைப்பு ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்” என்று கூறினார்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!