undefined

திமுகவின் அஜண்டாவாக செங்கோட்டையன் செயல்படுகிறார்”- ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

 

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவை அழிக்க திமுகவின் திட்டப்படி பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை செங்கோட்டையன் அரங்கேற்றி உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான கதை, வசனம் அனைத்தையும் எழுதியது அவரே. அதனால் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சரியானதே. அதிமுக தொண்டர்கள் செங்கோட்டையனை பூஜ்யமாக்கி விடுவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்து, ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்தது திமுகவின் பி-டீம் போன்று நடந்த செயல். திமுகவின் அஜண்டாவை நிறைவேற்றுவதற்காகவே இவர்கள் செயல்படுகிறார்கள். அதிமுக தொண்டர்கள் அவர்களை நம்ப மாட்டார்கள்.

தங்களுக்கு அம்மா கொடுத்த அடையாளத்தை இழந்து, தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்களை உருவாக்கிய இயக்கத்தை சிதைக்க முயற்சி செய்பவர்கள் இன்று வீதிகளில் தத்தளிக்கின்றனர். தேவர் ஜெயந்தி விழாவை காரணமாகக் கொண்டு பசும்பொன் பூமியில் ஒரு திட்டமிட்ட நாடகம் ஆடியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் கட்சியின் இலட்சியப் பாதையில் இருந்து விலகி விட்டனர்,” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?