மாதந்தோறும் ரூ.20,000 வரை ஓய்வூதிய வருமானம்... மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அருமையான வாய்ப்பு!
அஞ்சலகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், ஓய்வுக்காலத்திற்குப் பிறகும் நிலையான மாத வருமானத்தை உறுதி செய்ய உதவுகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம். 55 வயது முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள்.
இத்திட்டத்தில் ஒரே தவணையில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஜூலை - செப்டம்பர் 2026 காலாண்டிற்கு இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
ஒருவர் இத்திட்டத்தில் அதிகபட்ச வரம்பான ரூ.30 லட்சத்தை முதலீடு செய்யும்போது, 8.2% வட்டி விகிதத்தின் படி: ஆண்டு வட்டி வருமானம் ரூ. 2,46,000. காலாண்டு வட்டி (3 மாதங்களுக்கு ஒருமுறை): ரூ. 61,500 இதன் மூலம் சராசரியாக மாதம் ரூ.20,500 வரை வருமானமாகப் பெற முடிகிறது.
இத்திட்டத்திற்கான வட்டித் தொகையானது ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் - ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் முதலீட்டாளரின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்).