undefined

மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்... நாளை மாலை வரை சென்னை பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

 

மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை 5:30 மணி முதல் நாளை மாலை 3:30 மணி வரை சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' வைக்கப்பட உள்ளது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்பதால், அவருக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். நூற்றாண்டு கண்ட நாயகர் ஐயா நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று இயற்கை எய்தினார்.

வாழ்ந்த காலத்தில் கனிமவளக் கொள்ளை, தீண்டாமை மற்றும் ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர், தனது மறைவுக்குப் பிறகும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாக வழங்க வேண்டும் என்று அவர் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அவரின் விருப்பப்படியே, அவரது மகள்கள் மற்றும் பேரன்களிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது அவரது உடலைப் பதப்படுத்தும் பணிகள் மருத்துவமனையில் நடைபெற்று வருகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஐயாவின் மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இன்று மாலை 5:30 மணி முதல் நாளை மாலை 3:30 மணி வரை சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்பதால், அவருக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்டம் முதல் மணல் கொள்ளை எதிர்ப்பு வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனசாட்சியாக வாழ்ந்த ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.