உலகம் முழுவதும் பரபரப்பு... 190 குழந்தைகளை பட்டினியால் கொன்ற மதபோதகக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை!
கென்யாவில் குடும்பத்துடன் பட்டினி விரதம் இருந்தால் இயேசுவை நேரில் காணலாம் எனக் கூறி, 190 குழந்தைகள் உட்பட 191 பேரைக் பட்டினி போட்டுக் கொன்ற வழக்கில் மதபோதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கென்யா நாட்டின் கிலிபி நகரில் 'குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச்' என்ற மத அமைப்பை பால் மெக்கன்சி என்பவர் நடத்தி வந்தார். "உணவு உண்ணாமல் தீவிரமான முறையில் பட்டினி விரதம் இருந்தால், உலகம் அழிவதற்கு முன்பாகவே இயேசுவை நேரில் தரிசிக்க முடியும்" எனக்கூறி அப்பாவி கிராம மக்களை இவர் தீவிரமாக மூளைச்சலவை செய்துள்ளார்.
இவரது போதனையை உண்மை என நம்பிய நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உணவையும் நீரையும் தவிர்த்துப் பட்டினி விரதம் மேற்கொண்டனர். இதில் 190 குழந்தைகள் உட்பட 191 பேர் கொடூரமாகப் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு கிலிபி நகரில் உள்ள பால் மெக்கன்சியின் 800 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த பண்ணை நிலத்தில் கென்யா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த பண்ணை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 400 பேரின் உடல்கள் மற்றும் எலும்புக்கூடுகளைப் போலீசார் தோண்டி எடுத்து அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மாபெரும் படுகொலை வழக்கில், பால் மெக்கன்சி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.