ஈரோட்டில் பரபரப்பு... விஜய்க்கு இரட்டை இலை சின்னத்துல ஓட்டுப் போடுங்க... தொண்டர்களை அதிர வைத்த செங்கோட்டையன்!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட செங்கோட்டையன் திடீரென தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாய்தவறி பேசியது சுற்றியிருந்த தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதை சுதாரித்துக் கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசினார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வே.பெ தமிழ்ச்செல்வியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டு போட்டால் அது நோட்டாவாக மாறிவிடும் என தெரிவித்து பேசிக் கொண்டிருந்த அவர் இறுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வாய் தவறி கூறியவுடன் திடீரென சுதாரித்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்தை நான் கேட்டு கேட்டே பழகி விட்டேன் எனவும் ஒரு மூதாட்டி தான் கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது உங்களுக்குத்தானே எப்பொழுதும் வாக்களிப்போம் இரட்டை இலை சின்னம் தானே என கூறினார்.

ஆனால் நான் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் எனக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அதற்கு நிச்சயம் உங்களுக்கு தான் எனது வாக்கு என்று கூறினார் என கூறி சுதாரித்து பேசினார்.