திருச்சியில் பரபரப்பு... பிராட்டியூர் வாய்க்கால் கரையில் சிக்கிய 8 அடி நீள முதலை காவிரியில் விடுவிப்பு!

 

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் அருகே உள்ள வாய்க்கால் கரையில் 8 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பிராட்டியூர் பகுதி வாய்க்கால் கரையில் முதலை நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அந்த ராட்சத முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

allowfullscreen

வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை முறையாகப் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பிறகு, கல்லணை அருகே உள்ள காவிரி கரை பகுதியில் கொண்டு சென்று அந்த முதலையைப் பாதுகாப்பாக விடுவித்தனர். தற்போது இந்த முதலை பிடிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.