சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி வழக்கு !! அமைச்சருக்கு இதெல்லாம் சாதாரணமய்யா !!

 


அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், வக்கீல்கள் வில்சன், ரிச்சர்ட்சன் ஆகியோர், சவுக்கு சங்கருக்கு எதிராக சைதாப் பேட்டை கோர்ட்டில் 4 அவ துாறு வழக்குகளை நேற்று தாக்கல் செய்தனர். அதில், பல்வேறு யூடியூப் தளங்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி யில், மகாராஷ்டிராவில் சிவ சேனா கூட்டணி அரசை ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைபோல, தமிழகத்தில் திமுக அரசை கவிழ்த்து விடுவதாக எனக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்துள்ளார்.

நான், டாஸ்மாக் பார்களை நடத்தி வருவதாகவும், அதனால் என் மீது திமுகவினர் விரக்தியில் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் பொய்யாக தெரி வித்துள்ளார். இது அவதுாறானது.
இதேபோல, டுவிட்டர் பக்கத்தில் எனக்கு எதிராக பல்வேறு அவதுாறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அரசியல் விரோதிகள் தூண்டுதலின்பேரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சவுக்கு சங்கர் அவதுாறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

எனவே, அவதுாறு சட்டப் பிரிவின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.இதற்கு முன் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்த பொழுது அவர் மீது பணி பெற்றுதருவதாகக்கூறி ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கப்பட்டது ஆனால் அவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்துவிட்டதால் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.