திண்டிவனம் அருகே கோர விபத்து: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் பலி!

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பஸ் மோதிய பயங்கர விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குழுவினர் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மோதலின் வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் ஓட்டுநர் மற்றும் பக்தர் ஒருவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 13 பக்தர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் காயமடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.