'Sex Toy' தீப்பிடித்து எரிந்து நாசமான வீடு - மலேசியாவில் சோகம்!

 

மலேசியாவின் மலாக்கா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சார்ஜ் செய்ய வைக்கப்பட்டிருந்த பாலியல் சாதனம் திடீரென தீப்பிடித்ததில் படுக்கை மற்றும் வீட்டுப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

மலாக்காவில் உள்ள மெல்க்ஷாம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது மின் இணைப்பில் சார்ஜ் செய்ய வைக்கப்பட்டிருந்த பாலியல் சாதனம் அளவுக்கு அதிகமான வெப்பம் அல்லது மின்கசிவு காரணமாகத் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீ மளமளவென்று படுக்கை மற்றும் அருகில் இருந்த பொருட்களுக்குப் பரவிய நிலையில், தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை வெற்றிகரமாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பேட்டரி கோளாறுகள் மற்றும் அதிக வெப்பம் காரணமாக இதுபோன்ற மின்னணு சாதனங்கள் வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயங்கள் உள்ளதால், பாதுகாப்பற்ற முறையில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என விபத்துகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.