கொடூரம்... 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த  தொழிலாளி !

 

 

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணொருவருடன் தறித்தொழிலாளியான மாதையன் (39) என்பவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அவரது 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளை கடந்த 4 மாதங்களாக மாதையன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் தாயைக் கொன்றுவிடுவதாகவும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்தத் கொடூரச் செயல் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், சங்ககிரி மகளிர் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு தறித்தொழிலாளி மாதையனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.