சிறுமிக்கு பாலியல் தொல்லை... கண்டித்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதைக் கண்டித்த தாத்தாவை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ் (19), இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைப் பார்த்து கண்டித்த சிறுமியின் தாத்தாவை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!