undefined

 இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்!

 
சென்னை குன்றத்தூரை அடுத்த படப்பையில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு (60) நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வழக்கில் கைதான பொன்னம்பலத்தின் வயது மூப்பு, நோய் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக குன்றத்தூரில் தன்னுடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்களை மிரட்டி பொன்னம்பலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், வீட்டை காலி செய்துக்  கொண்டு அந்த பெண்கள் வேறு இடத்திற்கு சென்ற நிலையிலும், செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அந்த பெண்கள் குடியிருக்கும் படப்பை பகுதிக்குச் சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததில், பாதிக்கப்பட்ட பெண்களின் தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பக் கட்டையால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பொன்னம்பலத்தை கைது செய்த நிலையில், ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!