அதிர்ச்சி... பள்ளி மாணவர்களுக்கு பாலியல் வலைவீச்சு... ஆன்லைனில் இளம் பெண் விபரீதம்!
அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் வசித்து வருபவர் அலைசா ஆன் ஜிங்கர். 23 வயதாகும் இவர் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தம்பா காவல்துறை ஜிங்கரை கைது செய்துள்ளது. இதன்பின்னர் நடந்த விசயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.ஜிங்கர் கைதுக்கு பின், 4 சிறுவர்கள் இதேபோன்று நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த காவல்துறை 2023 நவம்பரில், மாணவர் ஒருவனிடம் 30 முறை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக ஜிங்கர் கைது செய்யப்பட்டார். பல மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பியும் அவர்களை உறவுக்கு அழைத்துள்ளார். தன்னை 14 வயது சிறுமி என கூறி கொண்டு பள்ளி மாணவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன் பின்னர் பல்வேறு மாணவர்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். இதுபோல், தன்னிடம் சிக்கிய முதல் சிறுவனிடம் எண்ணற்ற முறை பாலியல் உறவை கொண்டிருக்கிறார். ஸ்னாப்சேட் வழியே ஆபாச வீடியோவை பல மாணவர்களுக்கு அனுப்பி அவர்களை ஈர்த்துள்ளார். ஆன்லைன் மூலம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
அந்த முதல் சிறுவனுக்கு 12 முதல் 15 வயது இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். புளோரிடா மாகாணத்தில் பாலியல் உறவுக்காக ஒப்புதல் அளிக்கும் வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சிறுவர்களை கவர்ந்திழுத்தது மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது என 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, சிறுவர் ஆபாச படம் வைத்திருத்தல் என பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் முதன்முறையாக ஜிங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இன்றூ மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!