மாணவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு 20 வருட சிறைத்தண்டனை: தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம் கீழவாலிபன் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கார்த்திக் (24).
கொத்தனாராக வேலைப் பார்த்து வந்த கார்த்திக், கடந்த 2020ம் ஆண்டு 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திக்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!