அஜித்துடன் ‘லாங் டிரைவ்’ சென்ற ஷாலினி... வைரலாகும் செல்ஃபி வீடியோ!

 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் காரில் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட அழகிய செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘லாங் டிரைவ்’ என்ற குறிப்புடன் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தக் காணொலி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கார் பந்தயம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் எப்போதும் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் காரில் பயணித்த மகிழ்ச்சியான தருணத்தைக் காணொலியாகப் பதிவு செய்துள்ளனர்.

காரில் பயணித்தபடி ஷாலினி எடுத்துள்ள இந்த செல்ஃபி வீடியோவில், இருவரும் உற்சாகமாகவும் புன்னகையுடனும் காணப்படுகின்றனர். இந்த வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லாங் டிரைவ்’ என்ற வாசகத்துடன் ஷாலினி பகிர்ந்துள்ளார்.

ஷாலினி இந்த வீடியோவைப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அதனை இணையத்தில் அதிகளவில் பகிரத் தொடங்கினர். ‘என்றென்றும் அழகான ஜோடி’ எனப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் அன்பையும் கமெண்ட்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணங்கள் மற்றும் குடும்பத் தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ஷாலினியின் பதிவுகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ‘லாங் டிரைவ்’ செல்ஃபி வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.