ஷாக்கிங் வீடியோ... வீட்டின் ஜன்னலருகே அதிர்ச்சி... மீட்டர் நீள வெள்ளை மலைப்பாம்பு!

 

சீனாவின் ஷாங்காய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுமார் 3 மீட்டர் நீளமுள்ள வெள்ளை நிற மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷாங்காய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏர் கண்டிஷனர் வெளிப்புறப் பகுதிக்கு அருகே நீண்ட பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். வழக்கமான நிறத்தில் இல்லாமல் வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்தப் பாம்பை பார்த்ததும் மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த அந்த பாம்பை வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.

allowfullscreen

மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 3 மீட்டர் நீளமும் 15 கிலோ எடையும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பர்மிய மலைப்பாம்பு வகையைச் சேர்ந்ததாகவும், அதன் வெள்ளை நிறத்துக்கு அல்பினோ தன்மை காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பாம்பின் இனமும் தன்மையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.

குடியிருப்பு பகுதிக்குள் இவ்வளவு நீளமான வெள்ளை நிற மலைப்பாம்பு புகுந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாம்பை மீட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், அதனை வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெள்ளை மலைப்பாம்பை மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.