சவுக்கு சங்கர் தாயார் காலமானார்! சிறையில் இருக்கும் நிலையில் பெரும் சோகம்!

 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா (வயது 78), இன்று உடல்நலக் குறைவால் காலமானார். தனது மகன் சிறையில் இருக்கும் சூழலில் அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.ஏற்கனவே அவர் மீது குண்டர் சட்டம் பாயந்துள்ளதால், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், ஓராண்டு வரை அவர் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

தாயாரின் மறைவுச் செய்தியை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சவுக்கு சங்கர் தரப்பில் அவசர காலப் பரோல் அல்லது இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மனிதாபிமான அடிப்படையில் இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது நாளை தெரியவரும். சவுக்கு சங்கரின் தாயார் மறைவிற்கு அவரது நண்பர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.