நாளை Share Market இயங்குமா? NSE, BSE-க்கு விடுமுறை!அடுத்த வர்த்தக நாள் எப்போது?

 

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளான NSE மற்றும் BSE-க்கு செப்.14 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வர்த்தக விடுமுறை பட்டியலிலும் இந்த தேதி இடம்பெற்றுள்ளது.இதனால் நாளை பங்குகள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வழக்கமான ஈக்விட்டி வர்த்தகம் நடைபெறாது. ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பிரிவுக்கும் விடுமுறை பொருந்தும்.

அடுத்த வர்த்தக நாள் எப்போது?

செப்.14 திங்கட்கிழமை விடுமுறைக்குப் பிறகு, செப்.15 செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் வழக்கம்போல் செயல்படும்.

இதனால் சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சேர்த்து செப்.12 முதல் செப்.14 வரை தொடர்ந்து 3 நாட்கள் NSE மற்றும் BSE வர்த்தகம் நடைபெறாது.

 

கமாடிட்டி சந்தை நிலவரம்

MCX-ல் செப்.14 அன்று காலை அமர்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு மாலை அமர்வு மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.