undefined

வங்கதேசத்திற்கு மீண்டும் திரும்பும்  ஷேக் ஹசீனா.. உறுதி செய்த மகன்!

 

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் கலவரமாக மாறியதால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராஜினாமா செய்த பிறகும், அங்கு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் மலரும்போது, ​​எனது தாய் நிச்சயம் நாடு திரும்புவார் என்றார். ஆனால் அவர் அரசியல்வாதியாக இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.என் அம்மா நாடு திரும்ப மாட்டார் என்று முன்பு சொன்னேன். ஆனால் தற்போது நாடு முழுவதும் எங்களது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் முடிவை மாற்றிக் கொண்டுள்ளோம்.

அவாமி லீக்கை நாம் கைவிட முடியாது. ஏனென்றால் அது பழைய கட்சி. எனவே கட்சி மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி அம்மா மீண்டும் வருவார். புதிய தேசம் உருவாக்கப்பட வேண்டுமானால், அதற்கு அவாமி லீக் கட்சி இருக்க வேண்டும். எனவே இந்தக் கட்சியும் எங்கள் குடும்பமும் வங்கதேச அரசியலில் தொடரும். முகமது யூனிஸின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அவர் ஒற்றுமையைக் கொண்டுவர விரும்புகிறார். தனது அரசாங்கம் விரைவில் அமைதியை மீட்டெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா