இறந்த மாமியாரின் உருவத்தை ஓவியமாகப் பரிசளித்த மணமகள்! கண்கலங்கிய மணமகன்... நெகிழ்ச்சி வீடியோ!

 

 

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மணமகள் தனது கணவருக்கு அளித்த நெகிழ்ச்சியான பரிசு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

லதா என்பவர் விஸ்வாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு விஸ்வாஸின் தாயார் காலமானார். இதையடுத்து, கணவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அளிக்க லதா திட்டமிட்டார்.

அதன்படி, 'லைட்னிங் பெயிண்டிங்' (Lightning Painting) கலை மூலம் மறைந்த தனது மாமியாரின் உருவத்தை ஓவியமாக வரைந்தார். திருமண மேடையில் அந்த ஓவியத்தை கணவர் விஸ்வாஸிடம் காட்டி ஆச்சரியப்படுத்தினார்.

தனது தாயின் உருவத்தைக் கண்ட காவல்துறை அதிகாரியான விஸ்வாஸ், உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகளின் அன்பையும், மறைந்த மாமியாருக்கு அவர் அளித்த மரியாதையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.