undefined

அதிர்ச்சி!! ஆம்னி பேருந்துகள் 30% கட்டண உயர்வு!! பயணிகள் கடும் அவதி!!

 

இன்று ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிறு  ஆகஸ்ட் 13  வார விடுமுறை, ஆகஸ்ட் 14 சுதந்திரதின விழா என்பதால் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு எடுத்தால் போதும் தொடர்ந்து 4 நாட்கள் சொந்த ஊர் செல்லலாம் எனத் திட்டமிட்டு இருந்தனர்.  சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் வேலை நாளான  திங்கள் கிழமை   விடுப்பு எடுத்துக்கொண்டு  தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையில் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இதனால்   ரயில்  மற்றும்  பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் முன்பதிவு இருக்கைகள் ஏற்கனவேநிரம்பிவிட்டன.
 ஆம்னி பேருந்துகளிலும் 90% இருக்கைகள் நிரம்பிவிட்ட  நிலையில்  பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை காலமாக இருப்பதால்   ஆம்னி பேருந்துகள்  30%  கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

குளிர்சாதன வசதிகொண்ட அமர்ந்து செல்லும் பேருந்துகளில் மதுரைக்கு ரூ. 2000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல்  மதுரை, நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் பயணிகள்  குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!