அதிர்ச்சி.. உடலுறவுக்கு மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய மைத்துனர்!
கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவரை அவரது மைத்துனர் உறவான நபர் கழுத்தை நெரித்து கொன்றார். மேலும் அதோடு நிற்காமல் தலையை துண்டித்து உடலை துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். கட்டிடத் தொழிலாளியான 35 வயதான அதியுர் ரஹ்மான் லஸ்கர், அதே பகுதியில் வீட்டுத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த தனது உறவினர் பெண்ணை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண் பலமுறை மறுத்ததால் தான் அவளை கொன்றதாக ரஹ்மான் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு வருடங்களாக கணவரைப் பிரிந்திருந்த பெண், தினமும் ரஹ்மான் லஸ்கருடன் வேலைக்குச் சென்று வந்தார். துணை போலீஸ் கமிஷனர் விதிஷா கலிதா கூறுகையில், "ரஹ்மானை அந்த பெண் தவிர்க்க ஆரம்பித்துள்ளார்.அவரது போன் எண்ணையும் அவர் முடக்கியுள்ளார்.அந்த பெண்ணின் மறுப்பு அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமை மாலை, வேலை முடிந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவர் அவளை கழுத்தை நெரித்து, தலையை துண்டித்து, உடலை மூன்று பகுதிகளாக வெட்டி பின்னர் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்தினார்.வெள்ளிக்கிழமை காலை, ரீஜண்ட்ஸ் பூங்காவில் பாலித்தீன் பையில் துண்டிக்கப்பட்ட தலையை அப்பகுதி மக்கள் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், குளம் ஒன்றின் அருகே பெண்ணின் உடல் மற்றும் பிற பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன,'' என்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!