நாடு முழுவதும் அதிர்ச்சி... 13 வயது சிறுமியைக் கடத்தி 30 பேர் பாலியல் வன்கொடுமை... ஹோட்டல்களுக்கு விற்ற ஆட்டோ ஓட்டுநர்!

 

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்தி, 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமியை, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவன் திட்டமிட்டுத் தனியாகக் கடத்திச் சென்றுள்ளான். பின்னர் அந்தச் சிறுமியைப் பாதுகாப்பற்ற முறையில் ஒரு ஹோட்டல் உரிமையாளரிடம் பணத்திற்காக அந்த ஆட்டோ ஓட்டுநர் சட்டவிரோதமாக விற்றுள்ளான். ஹோட்டல் உரிமையாளரின் வசம் சிக்கிய அந்தச் சிறுமி, அடுத்த சில நாட்களுக்குக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட அந்த 13 வயது சிறுமியைச் சுமார் 5 நாட்களாகப் பல்வேறு பகுதிகளுக்கு ரகசியமாகக் கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள வெவ்வேறு ஹோட்டல் அறைகளில் அடைத்து வைத்து, ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கு வந்த நபர்கள் என அடுத்தடுத்து 30-க்கும் மேற்பட்டோர் அந்தச் சிறுமியை மாறி மாறி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி இந்த கொடூரக் கும்பலிடம் இருந்து ஒருவழியாகத் தப்பித்துத் தனது பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தனர்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாகச் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகள் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கடுமையான போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை அடைத்து வைத்திருந்த ஹோட்டல்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவறாக அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான உச்சகட்டத் தண்டனைகளை வழங்க வேண்டும் எனப் பல்வேறு மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.