நாடு முழுவதும் அதிர்ச்சி... Bisleri குடிநீர் குடிக்க பாதுகாப்பற்றது... சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI திட்டம்!
நாட்டின் முன்னணி அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களில் ஒன்றான பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்குப் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் புரோமேட் அதிகமாக இருப்பதும், தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட பிஸ்லெரி குடிநீர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்தப் பரிசோதனையில், குடிநீரில் இருக்க வேண்டிய பாதுகாப்பான அளவை விடப் புரோமேட் எனும் வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலி நியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ் கலப்பு: மேலும், குடிநீரில் பாலி நியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ் எனப்படும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட மாதிரிகளில் உள்ள பிஸ்லெரி குடிநீர் பொதுமக்கள் அருந்துவதற்குப் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதால், பிஸ்லெரி நிறுவனம் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணங்களின்போதும் அன்றாடத் தேவைகளுக்கும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முன்னணி பிராண்டான பிஸ்லெரி குடிநீரில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் விளக்கம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.