அடுத்தடுத்து அதிர்ச்சி... பெரும்பான்மை கிடைத்தாலும் விஜய்யை ஆளுநர் அழைக்க வாய்ப்பில்லை... தயங்குகிறாரா ஆளுநர்?!
தமிழக வெற்றிக் கழகம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்கத் தயாராகி வரும் நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்கள் குறித்து ஆளுநர் மாளிகைக்குச் சில புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆதரவுக் கடிதங்களில் உள்ள சில கையொப்பங்கள் போலியானவை அல்லது கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டவை என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவற்றைத் தனித்தனியாகச் சரிபார்க்க ஆளுநர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளதால், ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுப்பதில் காலதாமதம் ஏற்படலாம். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளை (மே 10) முடிவடைய உள்ள நிலையில், ஆளுநரின் இன்றைய பயணத் திட்டம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை கேரளா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைக்குள் புதிய முதல்வர் பதவியேற்காவிட்டால் அல்லது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் கேரளா சென்றால், தமிழகத்தில் தானாகவே ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழல் உருவாகும்.
ஆளுநர் மாளிகையின் இந்தத் தாமதப்படுத்தும் நடவடிக்கைக்குத் தவெக தரப்பு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. "எங்களிடம் தெளிவான பெரும்பான்மை உள்ளது, ஜனநாயக முறைப்படி ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், ஒருவேளை ஆளுநர் அனுமதி மறுத்தால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடவும் விஜய் தரப்பு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் நாளை காலை ஒரு புதிய முதலமைச்சரைப் பார்க்குமா அல்லது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் செல்லுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.