விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... அமைச்சர் வெங்கட்ரமணன் மீது மனைவி பரபரப்புப் புகார்!

 

மரம் சும்மா இருந்தால் கூட காற்று, இலைகளை சும்மா இருக்க விடுவதில்லை என்பது யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ, முதல்வர் விஜய்க்கு அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது. நீதி, நேர்மை, லஞ்சமில்லாத, ஊழல் இல்லாத அரசு என்று முதல்வர் விஜய் மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் போது தவெகவினர் செய்கிற அலப்பறைகள் தமிழக மக்களிடையே தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தவெக அமைச்சர்களும் அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்குகின்றனர். கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் வெங்கட்ரமணன் சிக்கலில் சிக்கியிருக்கிறார். அமைச்சர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி மீனாட்சி குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், பல்வேறு பரபரப்புப் புகார்களையும் முன்வைத்துள்ளார். சைதாப்பேட்டை 17-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி, "கடந்த மார்ச் மாதம் என்னைக் கருக்கலைப்பு செய்துவிட்டு வா என அடித்துத் துரத்திவிட்டார்; என்னை மிரட்டினார்" எனத் தெரிவித்துள்ளார். தனது 10 வயது பெண் குழந்தையைப் பிரிந்து இருப்பதாகவும், குழந்தை எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரம் எதுவும் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அழைப்பதாகச் சொல்லி ஏமாற்றி விட்டதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் எந்தப் பதிலும் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வீடு எங்கு உள்ளது என்பது தெரியாத நிலையில், தமக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் மூலம் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.