undefined

அதிர்ச்சி... 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 

எட்டாம் வகுப்பு  படித்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர்  ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் 13 வயது பிரிஜித் இன்பென்ட். பிரிஜித், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் பிரிஜித் இன்பென்ட் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிகிறது.

இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என நினைத்து பயந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

 பெற்றோர்கள் பார்த்து கதறித் துடித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?