தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி... திருவண்ணாமலையில் 3 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறையினர் தீவிர விசாரணை!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 16 நாட்களாகியும் சிபிசிஐடி விசாரணையில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக 3 பள்ளிச் சிறுமிகள் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் 3 மாணவிகள் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால் மாலை பள்ளி முடிந்தும் அவர்கள் வீடு திரும்பவில்லை. மாயமான 3 சிறுமிகளில் 2 பேர் உடன் பிறந்த சகோதரிகள், மற்றொருவர் அவர்களின் உறவுக்கார சிறுமி ஆவர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/ZEdZXuFiJDc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ZEdZXuFiJDc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

சிறுமிகளின் பெற்றோர் கூலி வேலைக்காகக் கேரளாவிற்குச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் காணாமல் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தண்டாரம்பட்டு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். பெறப்பட்ட புகாரின் பேரில் தண்டாரம்பட்டு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, பள்ளி செல்லும் வழியிலும், பேருந்து நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சேலத்தில் 3 மாணவர்கள் நேற்று காணாமல் போன நிலையில், மீட்கப்பட்டனர். நேற்று முன் தினம் ஒரு மாணவி வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சி பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்வது பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.