ஆண்டிப்பட்டியில் அதிர்ச்சி... மாமனார் என நினைத்து அவரது தாயாரை பெட்ரோல் ஊற்றிக் கொன்ற மருமகன்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாமனார் என்று தவறாக நினைத்து அவரது 81 வயது தாயார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் மலைக்கிராமத்தில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமனாரைக் கொல்லத் திட்டமிட்ட கார்த்தி, இருட்டில் மாமனார் என்று தவறாக நினைத்து அவரது தாயாரான மாரியம்மாள் (81) என்ற மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.
உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.