undefined

பெங்களூருவில் அதிர்ச்சி... ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

 

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி, ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் மூன்று வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தில், இலங்கை தலைநகரான கொழும்புவிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளிடம் உணவு பொருட்கள் வைப்பதற்கான டப்பாக்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, 2 பேர் இருந்து 31 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 4 கிலோ சைலோசைபின் காளான் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது கூட்டு தகவலின் பேரில் மற்றொரு விமானத்தில் வந்த மூன்றாவது பயணியிடமும்  14 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 2 கிலோ சைலோசைபின்  பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட  3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். அவர்களை விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம், விமான நிலையங்களில் கடத்தப்படும் போதைப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான சட்டப்படியான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் காட்டுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?