கோவையில் அதிர்ச்சி... நகையைத் திருடி காதலனுக்கு பைக் வாங்கித் தந்த கல்லூரி மாணவி!
Sep 4, 2026, 17:40 IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் தங்க நகைகளைத் திருடித் தனது காதலனுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 9 சவரன் தங்க நகைகளைத் திருடியுள்ளார். அந்த நகைகளை விற்று வந்த பணத்தைக் கொண்டு, தனது காதலனுக்கு விலை உயர்ந்த புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிப் பரிசளித்துள்ளார்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கல்லூரி மாணவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.