கோவையில் அதிர்ச்சி... ரயிலில் இளம்பெண்ணை கழிவறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறல் - வடமாநில இளைஞர் கைது!
கோவையிலிருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை கழிவறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையிலிருந்து மங்களூரு நோக்கிச் சென்ற ரயிலில், ஷொர்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு மதிய வேளையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை ராயல் ராஜு (30) என்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் திடீரெனக் கழிவறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்.
அந்தப் பெண் அவரிடமிருந்து போராடி விடுபட்டுத் தப்பியோடிய நிலையில், சக பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு இதுக் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, துரிதமாகச் செயல்பட்ட பயணிகள் மற்றும் அதிகாரிகள் அந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.