தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 

ஊட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 பள்ளி மாணவர்களுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகள் வழக்கம் போல் மதிய உணவு உட்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 19 மாணவர்களுக்குத் திடீரெனக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

சத்துணவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேக வைத்த முட்டையைச் சாப்பிட்டதால் தான் இந்த வயிற்று வலி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக் குறைவு ஏற்பட்ட உடனே அனைத்து மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.