தமிழகத்தில் அதிர்ச்சி... 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல் - ஐடிஐ மாணவர் கைது!

 

கடலூர் துறைமுகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடி சென்று திரும்பிய 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில், 17 வயது ஐடிஐ மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் துறைமுகம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 3 வயது பெண் குழந்தை, வீட்டின் அருகே மயங்கிய நிலையில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்துப் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்தத் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையின் வீட்டிற்கு அருகே வசிக்கும் 17 வயது ஐடிஐ மாணவனைக் கைது செய்தனர். அவரிடம் தற்போது தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.