காலையிலேயே அதிர்ச்சி... முன்னாள் துணை சபாநாயகர் திடீர் தற்கொலை... மேற்குவங்கத்தில் அதிர்ச்சி!

 

மேற்குவங்க மாநிலத்தின் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான ஆஷிஷ் பானர்ஜி (74) இன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷிஷ் பானர்ஜி இன்று காலை ராம்பூர்ஹட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்பும் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஷிஷ் பானர்ஜி ராம்பூர்ஹட் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அரசியல் தலைவர் ஆவார். மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் வேளாண் அமைச்சராகவும், சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அவர் தனது கட்சிப் பதவிகளிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.