undefined

அதிகாலையில் அதிர்ச்சி.. நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்!

 

சென்னையிலிருந்து இரவு 11மணிக்கு ஓட்டுனர் அபல்பாஷா என்பவர் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்தில் 35 பயணிகளை ஏற்றி கொண்டு பெங்களூர் நோக்கி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அதிகாலை 4.30மணிக்கு  கடக்கும் போது பேருந்து பழுது ஆகி தீபற்ற தொடங்கி உள்ளது.

இதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார்.பின்னர் பயணிகள் பேருந்தில் இருந்து அனைவரும்  அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இச்சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த  நிலையிலும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமாகி உள்ளது.

பின்னர் இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் தீப்பற்றி எரிந்து அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்