காலையிலேயே அதிர்ச்சி... எகிறப் போகுது தங்கம் விலை... சர்வதேச சந்தையில் $192 உயர்வு - இந்திய சந்தையில் பெரும்தாக்கம்!
Aug 6, 2026, 07:50 IST
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் நிதிச் சந்தை மாறுபாடுகள் காரணமாக, உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் 192.14 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹18,255.39) உயர்ந்து, 4,288 டாலர்களாகப் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அவுன்ஸிற்கு 2.22 டாலர்கள் உயர்ந்து 62.24 டாலர்களை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வின் தாக்கமாக, இந்திய மற்றும் தமிழக ஆபரணச் சந்தைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சென்னை சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் (1 கிராம்) ₹13,480க்கும் 22 கேரட் ஆபரணத் தங்கம் (1 சவரன்) ₹1,07,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.