அதிகாலையில் அதிர்ச்சி... ‘இன்றே கடைசி நாள்”.. ஒரே மெயிலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் - ஆரக்கிள் நிறுவனம் அடுத்தடுத்து அதிரடி!

 

பிரபல பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், செலவு குறைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தனது ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல்களை நேற்று அதிகாலையில் அனுப்பியுள்ளது. "இன்றே உங்களுடைய கடைசி வேலை நாள்" என்ற அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே ஊழியர்களின் அலுவலகக் கணக்குகள் மற்றும் லேப்டாப் அணுகல்கள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், உலகளாவிய ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.