undefined

அதிர்ச்சி... மகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை!

 

மகளை, தன்னுடைய துப்பட்டாவால், உடலோடு இறுக்கி கட்டிக் கொண்டு, குடும்பத்தகராறு காரணமாக, தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<a href=https://youtube.com/embed/DjOuJnjHsGE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/DjOuJnjHsGE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

தஞ்சாவூர் அருகே தெக்கூர் கிராமத்தில் உள்ள கல்லணை கால்வாயில் இரண்டு பெண்களின் சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், அங்கிருந்த பொதுமக்கள் இரண்டு உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பத்மஜோதி மற்றும் அவரது 13 வயது மகள் என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மஜோதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகளை துப்பட்டாவால் தனது உடலுடன் கட்டிக்கொண்டு இருவரும் கல்லணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகள் ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!