அதிர்ச்சி... இந்தியாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகளைக் காணவில்லை... சமூக வலைதளங்களில் உதவி கோரி தொலைபேசி வெளியீடு!

 

 

கோவா வந்திருந்த நேபாள மேயரின் மகள் ஆரத்தி, காணாமல் போனதாக புகார் வந்துள்ளதையடுத்து, மேயரின் மகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கோவா போலீசார் தெரிவித்தனர். நேபாளத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கோவாவில் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. நேபாளத்தில் உள்ள தங்காதி துணை பெருநகர மேயர் கோபால் ஹமாலின் மகள் ஆர்த்தி ஹமால் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஆரத்தி கடைசியாக கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் அஸ்வேம் பாலம் அருகே காணப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். 
ஆரத்தி  கடந்த சில மாதங்களாகவே கோவாவில் தங்கியிருந்ததாகவும், ஓஷோ தியான மையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் நேபாள பத்திரிக்கையான தி ஹிமாலயன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 


ஆரத்தி காணாமல் போயிருக்கும் நிலையில், தனது மகள் ஆரத்தியைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் உதவி கோரியுள்ளார் நேபாள மேயர் கோபால் ஹமால்.  கோவாவில் வசிப்பவர்கள் ஆர்த்தியைத் தேட உதவுமாறு அந்த பதிவில் கேட்டுக் கொண்டுள்ள நேபாள மேயர், இளைய மகள் அர்சூவும் மருமகனும் தங்கள் மகளைத் தேட கோவா சென்றிருப்பதாகவும், ஆரத்தி குறித்த எந்தவொரு தகவலையும் இந்த எண்களில் தெரிவிக்க வேண்டும் என்று 9794096014 / 8273538132 / 9389607953' தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளார் கோபால் ஹமால்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்