அதிர்ச்சி... ‘ஷோலே’ படத்தின் நகைச்சுவை நடிகர் அஸ்ரானி காலமானார்... திரையுலகினர் நேரில் அஞ்சலி!
இந்தி திரைப்பட உலகின் அனுபவமிக்க, பல்துறை நடிகரான கோவர்தன் அஸ்ரானி (அஸ்ரானி) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அஸ்ரானி, செயிண்ட் சேவியர் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
‘ஷோலே’, ‘மேரே அப்னே’, ‘பவர்ச்சி’, ‘அபிமான்’, ‘சுப்கே சுப்கே’ ஆகிய படங்களில் அவர் செய்த கதாபாத்திரங்கள் இன்றும் பார்வையாளர்களால் நினைவுகூரப்படுகின்றன. குறிப்பாக ரமேஷ் சிப்பி இயக்கிய ‘ஷோலே’ படத்தில் ஜெயிலர் வேடத்தில் நடித்த அவர் ரசிகர்களின் மனதில் அழியாத முத்திரை பதித்தார்.
350க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை உலகிற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர் அஸ்ரானி. திரைப்படத் துறையினரும், ரசிகர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு பாலிவுட் உலகிற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!