அதிர்ச்சி... தமிழ்பட இயக்குநர் நாகேந்திரன் திடீர் மரணம்!
2015ல் காவல் திரைப்படம் மூலமாக இயக்குநராக திரையுலகிற்குள் அறிமுகமான நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விமல், சமுத்திரகனி, புன்னகை பூ கீதா, எம் எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, அஸ்வின் ராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் காவல் படத்தை இயக்கியிருந்தார்.
அதில், "அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவு செய்தி கேட்டது மிக துயரமான நாளை துவங்கி வைத்திருக்கிறது. நாட்களும் நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்து போராடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டு போய் விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்ய காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்தி செல்கிறது. சகோதரனாய் நெருங்கிய நண்பனாய் பயணித்தவரை இழந்து போனதால் நெஞ்சம் கலங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!