undefined

அதிர்ச்சி... பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு கத்திகுத்து!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக இளம்பெண்ணைக் கத்தியல் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி முனியசாமி புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பைரவன். இவரது மனைவி செல்வராணி (26). கடந்த 2021ம் ஆண்டு இவர்களது பக்கத்து வீட்டில் பொன்ராஜ் என்ற ராசு (24) என்பவர் குடியிருந்துள்ளார். அப்போது பொன்ராஜுக்கும், செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து செல்வராணி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பொன்ராஜ் கைது செய்தனர்.  அதன் பின்னர் ஜாமீனில் வெளிய வந்த பொன்ராஜ், அண்ணா நகர் 3வது தெருவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணமான செல்வராணியை பழி தீர்க்கவேண்டும் என்று தனது நண்பரான டிஎம்பி காலனியைச் சேர்ந்த யோகேஷ் குமார் (24), என்பவருடன் நேற்று செல்வராணி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். 

பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து செல்வராணியை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த செல்வராணியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் வழக்குப் பதிந்து பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர் யோகேஷ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!