அதிர்ச்சி... ஒரே பைக்கில் 4 இளைஞர்கள் ஆபத்தான பயணம்!

 

கோவை - பொள்ளாச்சி சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு இளைஞர்கள் எந்தவிதப் பாதுகாப்புமின்றி ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல், ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் அமர்ந்து கொண்டு பிற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

allowfullscreen

உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற சாகசப் பயணங்கள் கோர விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறிப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகச் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.