அதிர்ச்சி ஆடியோ... பெண்களுடன் 3 திருமணங்கள் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் ரகசிய லீலைகள்!
தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது இரண்டு மனைவிகளை ஏமாற்றிவிட்டு மூன்றாவதாகப் பள்ளி ஆசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட மோசடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோக்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சப்-இன்ஸ்பெக்டர் முக்கப்பனுக்கு ஏற்கனவே முதல் மனைவி இருக்கும் நிலையில், அதனை மறைத்து விஜயா என்ற பெண்ணுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவரையும் ஏமாற்றிவிட்டு, லதா என்ற பள்ளி ஆசிரியை ஒருவரை மூன்றாவதாக ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 2-வது மனைவி விஜயா, தனது கணவரின் இந்த மோசடி மற்றும் ஏமாற்று வேலை குறித்து தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், சக அதிகாரி என்ற காரணத்தினால் போலீசார் முறையான விசாரணை நடத்தாமல், குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகவே ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருவதாக விஜயா கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் முக்கப்பனின் முறையற்ற தொடர்புகள், பெண்களுடனான அவரதுலீலைகள் மற்றும் அவரது மோசடிப் புத்தியை அம்பலப்படுத்தும் வகையிலான தொலைபேசி உரையாடல் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட விஜயாவிடம் முக்கப்பன் பேசிய ஆடியோக்களும் இதில் அடங்கும். இந்த ஆடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.