அதிர்ச்சி... தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு!

 

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இந்நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவது மிக அவசியமாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

30 வயதைக் கடந்த பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி ஆண்டுதோறும் முறையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறியத் தேவையான பரிசோதனைகளை எவரும் அலட்சியம் செய்யாமல் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.